என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொள்முதல் நிலையம்"
விழுப்புரம்:
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடை பெற்றது.திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண்மை அலுவ லகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு வானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் தலைமை தாங்கி திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.கூட்டத்தில் வானூர் வட்டார பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர்.விவசாயம் செய்வதற்கு சவாலாக உள்ள காட்டு பன்றியை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.பன்றியை கட்டுப்படுத்த வேளாண்மை துறை மூலம் மானிய விலையில் மருந்துகள் வழங்கப்பட வேண்டும். தக்கை பூண்டு விதைகள் மானியத்தில் பருவம் ஆரம்பிக்கும் முன் வழங்க வேண்டும். பூச்சிகொல்லி மருந்து கடைகளில் ஆய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்க வேண்டும். தனியார் விற்பனை நிலையங்களில் விற்கப்படும் நெல் விதையில் அதிக அளவு கலப்பு இருப்பதாகவும் கிளியனூர் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என புகார் தெரிவித்தனர்.
தோட்டக்கலை துறை மூலம் சாமந்தி மல்லிகை பூஞ்செடிகள் உரிய பருவத்திற்கு நடவு தரமான விதைகள் ஏற்பாடு செய்து தர வேண்டும். புதுகுப்பம் பகுதியில் காய்கறி பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் உள்ளதாகவும் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய மருந்தினை பரிந்துரை செய்ய கேட்டுக்கொண்டனர். திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசின் மூலம் மானியம் வழங்க வேண்டும் .நெல் கொள்முதல் நிலையங்களை ஜனவரி முதல் வாரத்தில் திறந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர். முந்திரி கன்றுகள் நடவு செய்ய தரமான கன்றுகளை வழங்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.திண்டிவனம் வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் நாராயண திங்கள், தோட்டக்கலை துறை அலுவலர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்து திட்டங்கள் குறித்து பேசினர். இதில்தமிழ்நாடு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் முன்னோடி விவசாயிகளான புதுக் குப்பம் ஏழுமலை, கொஞ்சிமங்கலம் கனகராஜ், வானூர் செந்தி ல்குமார், இடையன்சாவடி அய்யப்பன், சேமங்கலம் பழனி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவா,நாகம்மாள் வேலு நைனார்பாளையம் நாராயணசாமி உள்பட விவசாயிகள் கொண்டனர்.இதில் உதவி வேளா ண்மை அலுவலர்கள் ரேகா, ஜெயலட்சுமி, தங்கம், பஞ்சநாதன்,வாச மூர்த்தி, ஆத்மா திட்ட அலுவலர்கள் வாழ்வரசி, கோவிந்தசாமி, சந்துரு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.இறுதியாக வேளாண்மை அலுவலர் ரேவதி நன்றி கூறினார்.
- வியாழக்கிழமைதோறும் சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறுகிறது.
- விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை ஏலத்தில் கொள்முதல் செய்து வருகின்றனர்.
வெள்ளகோவில் :
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது.இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமைேதாறும் தேங்காய் பருப்பும், வியாழக்கிழமைதோறும் சூரியகாந்தி விதை ஏலமும் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையமும் செயல்பட்டு வருகிறது.
இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கரூர், திருச்சி, தஞ்சாவூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைந்த தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை, நெல்லை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இதில் வெள்ளகோவில், மூலனூர், காங்கயம், முத்தூர், கொடுமுடி, ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை ஏலத்தில் கொள்முதல் செய்து வருகின்றனர்.
தற்போது நெல் அறுவடை காலம் என்பதால் திருப்பூர் கலெக்டர் எஸ்.வினீத் வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு திடீரென நேரில் வந்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்து எவ்வாறு இந்த நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது என்பதை தொழிலாளர்களிடம் கேட்டறிந்து நெல் சுத்தம் செய்வது, எடை போடுவது, மூடை போடுவதை செய்து காண்–பிக்க சொல்லி நேரில் பார்த்து விவரம் கேட்டறிந்தார். அப்போது ஒழுங்குமுறைக்கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் மற்றும் அரசு அதிகாரிகள், போலீசார் உடன் இருந்தனர்.
- விவசாயிகள் அல்லாத மற்ற நபர்கள் நெல் விற்பனை செய்தால் நடவடிக்கை
- கலெக்டர் தொடங்கி வைத்து எச்சரிக்கை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட் டத்தில் 2023-ம் ஆண்டில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய முதற் கட்டமாக 30 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கிட உத்தரவு பிறப்பிக் கப்பட்டது. அதில் நேற்று முதல் 23 நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் செயல் பட தொடங்கின.
காவேரிப்பாக்கம் பேரூ ராட்சி சமுதாய நலக்கூடத் தில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத் தில் கலெக்டர் வளர்மதி விவ சாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணியை பூஜை செய்து தொடங்கிவைத்தார்.
விவசாயிகளிடமிருந்து சிட்டா, அடங்கல் ஆவணங்களை கிராம நிர்வாக அலு வலரிடம் பெற்று அதை கணி னியில் பதிவு செய்திடவேண் டும்.பதிவின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலரின் கையொப்பம் பெற்று விவசா யிகள் நேரடி நெல் கொள்மு தல் நிலையத்துக்கு நெல் கொண்டு வரும் பட்சத்தில் அவர்களிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படு கிறது.
நெல் மூட்டைகள் மூன்று நாட்கள் மையங்களில் வைக் கப்பட்டு பின்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழ கத்தின் குடோன்களான குகைநல்லூர் மற்றும் ராணிப் பேட்டை ஆகிய இடங்களில் உள்ள இரண்டு குடோன் களில் அடுக்கி வைக்கப்படும். குகைநல்லூர் குடோனில் 7,000 மெட்ரிக் டன், ராணிப் பேட்டை, வாலாஜாவில் உள்ள குடோனில் 16 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இட வசதி உள்ளது.
நடப்பாண்டில் விவசாயிக ளிடம் இருந்து வரப்பெறும் நெல்லை பொறுத்து சுமார் ஒரு லட்சம் மெட்ரிக் டன் வரை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் விவசா யிகள் அல்லாத வியாபாரிகள் மற்ற நபர்கள் நெல் விற்பனை செய்வது கண்டறியப்பட் டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை கண் காணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் ஏதே னும் குளறுபடிகள், புகார்கள், குறித்து விவசாயிகள் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரை 8807825796 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- புதிய நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழாவில் பரமக்குடி எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
- அ.புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கார்த்திக்பாண்டியன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போகலூர் ஒன்றியம் அரியகுடி புத்தூரில் ரூ.6.87 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய நெல் கொள்முதல் நிலையத்தை பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன் திறந்து வைத்தார்.
அதேபோல் அரியகுடி புத்தூரில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் தலைமை தாங்கி 30 பேருக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினார்.இந்த விழாவிற்கு ஒன்றியக்குழு துணை தலைவர் பூமிநாதன், மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அ.புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கார்த்திக்பாண்டியன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் போகலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சிவசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) இளங்கோ மற்றும் அரியகுடி புத்தூர் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும்.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவிநாசி:
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின், அவிநாசி ஒன்றியம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தத்தனூர் கிராமத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்து அரசாணை வெளியிட வேண்டும்.தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க கொப்பரை கொள்முதல் விலையை கிலோவுக்கு 150 ரூபாய் என நிர்ணயம் செய்ய வேண்டும்.அனைத்து பகுதிகளிலும் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். தென்னை, பனை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- நெல் கொள்முதல் நிலையத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் சேத்தூர், மேட்டுப்பட்டி, முகவூர், வடக்கு தேவதானம் மற்றும் தெற்கு தேவதானம் என 5 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டுவருகிறது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு தேவதானம் ஊராட்சி கோவிலூரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கடந்த ஆட்சியில் ராஜபாளையம் தொகுதியில் 2 இடங்களில் நெல்கொள்முதல் நிலையம் செயல்பட்டது. தற்போது தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் சேத்தூர், மேட்டுப்பட்டி, முகவூர், வடக்கு தேவதானம் மற்றும் தெற்கு தேவதானம் என 5 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டுவருகிறது.
தெற்கு வெங்காநல்லூர் மற்றும் சொக்கநாதன்புத்தூர் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிதாக நெல்கொள்முதல் நிலையம் இந்த வாரத்தில் அமைக்கப்படும்.
தி.மு.க. ஆட்சி அமைந்து மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானது முதல் தமிழ்நாடு செழிப்பான மாநிலமாக திகழ்கிறது. ராஜபாளையம் தொகுதியில் 2 வெள்ளாமை பார்க்கும் அளவிற்கு கண்மாய்களிலும் குளங்களிலும் தண்ணீர் வசதி உள்ளது. இதனால் விவசாயமும் விவசாயிகளும் வளர்ந்து வருகின்றனர் என்றார்.
நிகழ்ச்சியில் அலுவலர் செந்தில்குமார், அவைத்தலைவர் மிசா நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்